Thursday 4 August 2011

uravugal

அண்ணனாம் ,தம்பியாம்
அன்பை பொழியும் அன்னையாம் தந்தையாம் 
தாயன்பு அனைத்தையும் தன்னிலே கொண்ட தமக்கையாம் 
தானே எப்பொழுதும் அனைவர்க்கும் குழந்தையாய் தங்கையாம் 
தான் வாழும் கூட்டிலே,தன்குஞ்சுகளோடு 
தன் வாழ்வு குதூகலம்தான் 
தெருவிலே தெரு புழுதியிலே 
வீட்டிலே ,தன் கூட்டிலே 
மெய்யான சண்டையும் சிறு மணர்த்துகளாக 
பொய்த்து போகும் பாசக்கட்டு 
தான், தன் கூடு, தன் நிறைவு எனும்போது 
தான் அறியாமலும் சில வேளை தான் அறிந்தும் 
பிறக்கும் ஒரு சில சொற்களும் செயல்களும் கூட
பல சமயம் நெருப்பாய்ச்சுடும் மாயமென்னவோ?
வழியாய் வரும் வாழ்கை க் கூட்டுக்குள் 
தானும் தலைவன் /தலைவியாகி தன் குஞ்சுக்கு 
தாய் தகப்பனாகும் போது
தானே அன்புக் கூடகிறான்,
தான் வளர்ந்த அழகான வீடு,
அன்புக்கூடு களைந்து கிடப்தறியாமலே 
வேர் கொண்ட மரமும்,மரம் கொண்ட கிளைகளும் 
கிளை கொண்ட மலரும் ,மலர் கொண்ட கனியும் 
மணத்து சிறக்கும் போது 
கண்ணுக்கு தெரியாத வேர் கொண்ட 
வாசமும் புலப்படுமோ 
அல்லது வேருக்கு வாசமும் உண்டோ 
என்றும் நினைக்கவும் தோன்றுமோ?

No comments:

Post a Comment