Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 6

மனிதனை தேடுவதா?ரொம்பவும் கடினமான காரியம்,
ஏழு வரங்கள் அல்ல ஈரேழு வருடங்களனாலும்விடை காண முடியாத வினா 
மனித உருவகம்தான் 
மனம் காட்டும் பளிங்கு மனதை காட்டினால்,
அழகு முகம் தெரியாது,அடிக்கடி தெரிவது மிருக விகாரம்தான்..,
சிறு திருத்தம்
மனம் அழகாயிருந்தால் எல்லாம் அழகாய் தெரியும்
அங்கு மனிதனும் அழகாய் தெரிவான் 
இல்லாவிடில்,அழகான மனிதனும் அகோரமாய்,மிருகமாய் தோன்றுவான்
வினாவுக்கு விடை இல்லாமல் இது என்ன விளக்கம் என்று தோன்றுகிறதா 
மனிதனை தேடுவது கடினம் ஆனால்மனிதனாக முயற்சிப்பது எளிதல்லவா?
மனிதனை அடையாளம் காட்ட ஆன்மீகத்தையும்  ஒரு கருவியாக அல்லது காரணமாக கொள்ளலாம்
ஆன்மீக தேடலுக்கு அனைத்து இன்பங்களும் தேவை என்று கூட தோன்றுகிறது
சிறு மலரையும் சிறு வண்டையும் காற்றையும் மழையையும் 
கடலையும் வானையும்காதலையும் கடவுளையும்
சிறு குழந்தையின் சிரிப்பையும்,நரை கிழவன் நடுக்கத்தையும்
ரசிக்க எல்லா இதயதுக்குளும் சிறு துளி ரசனையாவது இர்ருக்க கூடும்
அந்த சிறு துளியில் தான் தெரிகின்றானோ மனிதன்....
இல்லையென்றால் எல்லா கடவுளும் அவதாரமாக வந்து மனிதபிறவி எடுத்தது எதற்கோ?
இன்பங்களையும்,துன்பங்களையும் ரசிக்கதானோ
மனிதனாக பிறக்கவும் மாதவமும் செய்திடல்  வேண்டும் தான்  ,   
மனிதனுக்குள்ளேயே மனிதனை தேடினால் கிடைப்பானோ என்னவோ 
தேடிபார்போமா ????

No comments:

Post a Comment