Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 8

ஆனந்த தண்டவமோ ஆழி ஊர்த்துவ தண்டவமோ
அடி முடி தேடி அலையவிட்ட ,

ஆடிய பாதத்தை தூக்கிய அம்பலவனனுக்கும் 
அரங்கனை போல் ஆசை வந்தது போலும்,_அடி அளக்க 
 தூக்கிய பாதம் விண்ணளக்க ,கண்ணசைவிலேயே 
சிறு கட்டேறும்புக்கும் படியளக்கிறான் 
ஆடியவன் ஆட்டியும் வைக்கிறான் அனைவரையும் பொம்மையை  போலே 
ஆடும் பொம்மைக்கு தெரியாது ஆடும் சூத்திரம் அவனிடதிலென்று 
ஆட்டமோ சுவாரசியம் பொம்மைக்கோ பெருமிதம் 
பாவம், தன் கயிற்றின் நுனி தன்னிடம் இல்லை என்று 
அந்த பொம்மலாட்ட பொம்மைக்கு தெரியாது     
அடி எடுத்து வைக்கும் குழந்தைக்கு 
அடுத்த அடி ஓட்டம்தான் 
ஐந்தில் ஆரம்பித்தது ஆயுள் வரை
ஓட்டம் ஓட்டம் தான் 
ஓடும் ஓட்டம் எதற்காகவோ, எதையோ தேடித் தேடி
நாடிய பொருள்மேல் நாட்டம் கொண்டும் 
தேடிய பொருள்மேல் மென்மேலும் தேடல் கொண்டும் 
கடைசிவரை நிற்காத ஓட்டம் 
ஒரு முறை தேடல் விடையில் சுவை காண 
விடமுடியாது வாழ்க்கை முழுதும் தேடல் ஓட்டம்தான் (சிறந்த உதாணரமாக இந்த கவிதை தேடலையும் சொல்லலாம் )
கரை சேர கடவுளை பற்ற ,ஆன்மீக தேடலும் ஓட்டம் போல் தோன்றுகிறது
ஓடி ஓடி களைத்தாலும் ,தேடுவது என்னவென்றே தெரியாமல் தேடுவதும் 
கிடைப்பதும் என்னவென்று தெரியாமல் இருப்பதும் 
சுகம்தான்,இன்பம்தான் 
உலகமே மாயை என்னும் உலகில் மாயையை தேடுவது வியப்புதான்  
ஆனால் நீர்க்குமிழிபோல் மாறி மாறி  கிடைக்கும் சுகமும் துக்கமும் 
வாழ்வின் சுவாரஸ்யமான பக்கங்கள்தான்  
அன்புடன் 
சுபாரமேஷ் 

No comments:

Post a Comment