Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 10

பூமித் தாயின் மடியில் தான் எத்தனைஎத்தனை 
செல்வங்கள் ....
ஒன்றில் ஒன்று எது சிறந்தது,
பிரித்துதான் பார்க்க முடியுமா?
தாயின் குழந்தைகள் பத்தானாலும் 
பத்தும் முதல் குழந்தைதான் தாய்க்கு 
இறைவனின் எண்ணற்ற குழந்தைகளில் 
மனிதராகிய நாமும் குழந்தைதான் 
குழந்தையின் சிரிப்பு இறைவனிடம் தேடல் 
குழந்தையின் கோபம் உரிமை 
இறைவனை அறிய அடையும் வழி 
குணமாகிய மனித மனம் 
அறியும் குணமோ தங்கத்தை வார்த்தது 
தங்கத்தின் தரமோ தணலில் 
தரத்தில் உயர உயர தங்கமோ தஹதஹகிறது 
குணத்தின் தரத்தை தங்கத்தில் காண 
மனதையும் இடலாம் புடத்தில் 
புடத்தில் போட்ட தங்கம் பொன் நகையகிறது
தங்கதச்சன் கைகளில் 
புடத்தில் போட்ட மனமும் ஆகலாம் பொன்னாக
தங்கதச்சனாம் இறைவனின் கைகளில் 
தாய் அறிவாள் தன் மகவின் 
கனவை, ஆசையை 
தானே வழியும் வகுப்பால் தானே அவ்வளவும் நிறைவேற 
தாய் அறியாத எல்லாமும் அறிந்த இறைத் தாயும் உண்டு,
எல்லாமும் ஆனா தாயே இறைவி யாய் ஆவதும் உண்டு 
யாதகிலும், காண்பது யாவும் நல்ல மனதின்   வாயிலே
வேண்டியதை பெறுவோம் இறைவன் வழியிலே 
வழியை தேடும்
சுபாரமேஷ் 

No comments:

Post a Comment