Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 12

ஆசைக்கு அளவுகோல் யாராலும் அளவிடமுடியாது
அளக்கும்  அளவின் நீட்டலும் குறைச்சலும் 
அவரவர்  நிர்ணயித்த அளவின் நிர்மாணம் .
நிர்மாணித்ததை அளக்கும் பக்குவம் எளிதல்ல 
எத்தகை துன்பம் தோன்றின் துவளாத மனமும் உண்டோ
ஆசை இன் அளவு போல் துன்பத்தின் அளவும் அளவிட முடியாதது
பால்நிறைந்த பாத்திரத்தில்  ஒரு துளி கள் போல்
பாசத்தின் அளவில் ஒரு சிறு இடறலும் 
பாத்திரத்தையே கள் ஆக மாற்றும் ___ஆனால் 
கள் யின் இயல்பு மாசு
பாலின் இயல்பு தூய்மை 
எத்தகை மாசு படிந்தாலும் பாலின் இயல்பை மாற்றவா முடியும் 
அன்பு கொண்ட மனதில் ஹிம்சை இர்ருகாது 
ஆனால் துயரம் கொண்ட மனதை துன்பமே ஹிம்சையக்குகிறது 
துன்பத்தை தொலைக்க தூய உள்ளம் இர்ருந்தலும் கூட போதாது
முன்பு சொன்னப்படி அசாத்ய அதிர்ஷ்டமும் கூட வேண்டும்தான் 
காலம் போகும் போக்கில் அதிர்ஷ்டத்தையும் நம்பத்தான் வேண்டுமோ 
 அதிர்ஷ்ட காற்று எப்படி வீசுகிறது என்று பார்போம் 
இப்படிக்கு
சுபாரமேஷ் 

1 comment:

  1. புரட்சி கவினியின் கவிதைகள் மிக அருமை. அகராதியை புரட்டுகிறேன். புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கள்.

    அத்திம்பேர்

    ReplyDelete