Saturday 6 August 2011

anbu

கொடுக்க கொடுக்க குறையாத அன்பும் 
குறைந்துதான் போவதுண்டு 
அன்பால் பிறரை அடக்கி அன்பு செய்யும்போது 
அடக்கியும் அடிமைபடுத்தியும் 
என் அன்பில் அடங்கியும்தான் போக வேண்டும் 
என்ற அன்பின் ஆளுமையில் 
சிறுமையும் பட்டுத்தான் போகிறது 
அளக்கவும் முடியாத பெருமிதமான அன்பு 
தானே அடங்கும் அன்பில் பக்தின் நெகிழ்வு காணலாம் 
கொடுக்க கொடுக்க பாரம் குறைவது போல 
கொடுக்கும் அன்பின் பாரம் குறைந்தால் தான் என்ன 
ஆனால் அன்பின்  பாரத்தின் அளவு ,
ஒரு சிறு மயிற்பீலி இன் பாரம் பெரும் வண்டியையே சாய்த்துவிடும் 
உண்மைக்கொண்டது.
(பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்து பெய்ன்)
அதுபோல அது ஊற்று நீர் போலல்லவா 
ஊறி ஊறி நிரம்பி வழிந்து 
தானும் மூழ்கி அனைத்தையும் மூழ்கச்செய்கிறது 
மீளவே முடியாமல்.

No comments:

Post a Comment