Tuesday 5 February 2013

ஒரு சிறு துயரத்தின் வெளிப்பாடு....


உலை கலத்தின் வெப்பம் போல்
உதிரத்தின் வெப்பமும் அதிகம்தான்,
உடம்பிற்குள்ளே ஓடும் போது,
பகலை பார்பதை விட
பதுங்கு குழியை பார்பவர்களுக்கு
உதிரமும் உறைந்துதான் கிடக்கிறது உரையமலே,
இயல்பை விட்டு,,
இயல்பே இயல்பை மறந்துபோகும்போது
எழிலான இலங்கைக்கு என்றைக்கு எழுச்சி ?
காற்றிலே பறக்கும் தூசி துகள்கள்
ஆங்காங்கே விழுவது போல்
அகிலமெங்கும் அலைகழிந்திடும் மனித துகள்கள்
காற்றிலேயே மறைந்திடுமோ அன்றி ,
காற்றிலே பறந்த விதை போல
மண் பற்றி ,வேர் கொண்டு விருக்ஷமகுமோ?
வாழ்வில் கனவு காணும் போது
வாழ்வே கனவாகும் நியாயமென்ன?
நாம் நம்மையே நினைத்து
புலம்புவதகே ஒரு யுகம் வேண்டும் போது
இன்னொரு யுகம் எடுத்தால்தான்
எல்லாம் கண்ணில் காணும் போல,
அளவற்ற மகிழ்வு காணும் போது
சிறு துளி துயரமும் கொண்டால் _அடுத்தவர்காக
கண்ட மகிழ்வும் சிறு துளி கூடவும் செய்யுமோ?
பார்ப்போம்...............


Thursday 13 December 2012

மலர்கள்
மலரும் பூ மலர்ந்தது மணம் பரப்ப
மலரின் பெருமையாக,
உதிரும் பூவும் உரைத்தது உரமாவேன்
உன் போன்ற ஒர்ராயிரம் மலர்வனதுக்க்காகவென்று
பூவாக மலர்ந்தும் , மனமில்லாமல் போனாலும்
நிச்சயம் உரமாவேன் ஒருநாள்
உயிரேடுததன் பலனாக 

Saturday 19 November 2011

pennaga thondruvadhu....

கல கல வென சிரிக்கும் குரல்
என்னஇது நான் இங்கிருக்க என் போல் சிரிக்கும் யாரோ?
யாரென்று யாரென்று காண்கிறேன்
காணக்கிடைக்கவில்லை,
காணும் யாவும் கற்பனையின்றி கனவுதானோ?
உற்றுபார்க்கும் போது
என்றோ நான் சிரித்த சிரிப்பினோளிகல்தான்,
சிரித்து சிரித்து கண்ணோரம் துளிர்க்கும்
சிறு துளி கண்ணீரும் தெரிகிறதே ,
கனவுக்கண்ணிரில் நினைவுக்கண்ணிரும் தெரிய,
நினைத்தும்தான் பார்கிறேன்
ஆம் ,கண்ணிர் வர கடைசியாய் சிரிததேபொழுது
சிரிப்பு மட்டும் தானா
வெடித்து அழும் அழுகையில் வரும் நிம்மதிஎங்கே?
இதழ் கடையோரம் நின்றுவிட்ட புன்னகை இன்
அருகில் இதழ் மடிந்து காண்பதென்ன?
உளிழுக்கபட்டஅழுகை இன் ஆரம்பமா முடிவா,
கொப்பளிக்கும் கோபம் போனதெங்கே?
ஆங்காங்கே ஒரு குரல் தோன்றும் போது
கோபமும் வருமோ என்ற குற்றத்தில்
கோபமும் குற்றமானதின்  மாயமென்ன?
ஊண் உடல் வருந்தி
வருத்தத்தையும் வருந்தி போகச் செய்யும்
வாழ்வு கண்ண்டது எது?
கண்ண்டெடுத்தவாழ்வில்
மோகனமும்,ஸ்ரிங்காரமும் மூடி வைத்த
அறைக்குள்ளே முடிந்தும் விடுமா?
தோன்றும் உணர்வின் தோன்றலும் முடிவும்
தோன்றா செய்வது எத?
நினைபதையும் நெஞ்சுக் குழியிலேயே
நிறுத்தி விடுவதன் பெயர்தான் என்ன?
எதனை முறை கேட்டாலும்
நெஞ்சிலே நிற்பதுவும்தான்  என்ன?

Tuesday 27 September 2011

savaari

ஆஹா ,ஆஹா என்ன ஜோரு,
சவாரி என்ன ஜோரு,
ஆட,ஆட,ஆனந்தத்தில் 
ஆட்டமே மறந்து போகும் ஜோரு 
சவாரி ஜோரு,ஆஹா ஜோரு 
சவாரி ஜோரு ,
யானையா ?குதிரையா? சவாரி ஏதாகிலும்
கால் நோகாத சவாரியில் 
எதுவுமே ஜோருதான்,
அதைவிட ஜோரு,
யனையாய்,குதிரையை,அடுத்தவர் முதுகு,
ஆன மேல அம்பாரியாம்,
அப்பா முதுகு வாகனமாம் சிறு பிள்ளைக்கு 
காணும் உலகில் காண்பவர் யாவருக்கும் 
காண்பவை எல்லாமே அம்பாரியானால் ???????
ஜோருதான் சவாரி ஜோருதன் 
வாழ்க்கை சவாரி ஜோருதான்
சவாரி ஜோருதான்......

Friday 2 September 2011

manidhabimaanam

வாழும் வாழ்கையே ஒரு விளையாட்டுதான் 
மிகவும் சுவாரஸ்யம் கண்ணாமூச்சிதான்
நீ எந்த பக்கம் நான் எந்த பக்கம்
தெரிந்தும் தெரியாதது போல் 
தெரிந்தே ஆடுவது அதைவிட சுவாரஸ்யம்தான் 
நினைத்ததும் கிடைப்பது மகிழ்வு என்றால் 
தொலைந்ததும் கிடைத்தால் பெருமகிழ்வுதான் 
எத்தனைமுறை வேண்டுமானாலும் 
தொலைக்கவும் தோன்றுகிறதோ 
தொலைத்த மகிழ்ச்சியை மீண்டும் பெற 
என் செய்ய , எல்லாம் புரிந்தும் 
ஒரு முறை தொலைத்தது ,
தானறியாமல் தொலைந்தது ,அறிந்தே தொலைக்கப்பட்டது
எது என்றே அறியாமல் தொலைந்தது
எதாகிலும் கிடைத்தால் ஆனந்தம்தான்
கிடைக்குமா என்பதுதான் சந்தேகம் 

Friday 12 August 2011

maayakkannadi

மாய வித்தைக்காரனின் மாயவிளையாட்டு போல 
என்னன்ன மாயங்களை காட்டுகிறது மாய மனது 
எத்தனைஎத்தனை எண்ணங்கள் 
எத்தனைஎத்தனை கோபங்கள் 
அளவிடமுடியாத ஆனந்தங்கள்
அள்ள இயலாத சோகங்கள் 
இன்னும் எவ்வளவு 
வருத்தங்களோ, விகாரங்களோ
மழைக் கால மேகங்கள் வானை 
மறைத்து மறைத்து போவது போல
மனதில் வந்து வந்து போகின்றது 
மாயக்கரனின் மாயக்கண்ணாடி போல
மனதைப் பார்க்க முடிந்தால் ___அடுத்தவர் 
மனதையும் படிக்க  முடிந்தால்
அந்த நிலை இன் பிரதிபலிப்பு 
இயற்கை இன் சீற்றத்திற்கு முன் எம்மாத்திரம் ?

Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 12

ஆசைக்கு அளவுகோல் யாராலும் அளவிடமுடியாது
அளக்கும்  அளவின் நீட்டலும் குறைச்சலும் 
அவரவர்  நிர்ணயித்த அளவின் நிர்மாணம் .
நிர்மாணித்ததை அளக்கும் பக்குவம் எளிதல்ல 
எத்தகை துன்பம் தோன்றின் துவளாத மனமும் உண்டோ
ஆசை இன் அளவு போல் துன்பத்தின் அளவும் அளவிட முடியாதது
பால்நிறைந்த பாத்திரத்தில்  ஒரு துளி கள் போல்
பாசத்தின் அளவில் ஒரு சிறு இடறலும் 
பாத்திரத்தையே கள் ஆக மாற்றும் ___ஆனால் 
கள் யின் இயல்பு மாசு
பாலின் இயல்பு தூய்மை 
எத்தகை மாசு படிந்தாலும் பாலின் இயல்பை மாற்றவா முடியும் 
அன்பு கொண்ட மனதில் ஹிம்சை இர்ருகாது 
ஆனால் துயரம் கொண்ட மனதை துன்பமே ஹிம்சையக்குகிறது 
துன்பத்தை தொலைக்க தூய உள்ளம் இர்ருந்தலும் கூட போதாது
முன்பு சொன்னப்படி அசாத்ய அதிர்ஷ்டமும் கூட வேண்டும்தான் 
காலம் போகும் போக்கில் அதிர்ஷ்டத்தையும் நம்பத்தான் வேண்டுமோ 
 அதிர்ஷ்ட காற்று எப்படி வீசுகிறது என்று பார்போம் 
இப்படிக்கு
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 11

ஆனந்தமாய் ஒருவன் அமர்ந்து இருந்தான் ஆற அமர,
அருகில் சென்று அறிந்தால் ,சுகமாய் அடிகிறது காற்று,
என் அதிர்ஷ்டம் என்றான் 
என்னஇது காற்றடிக்க கூட அதிர்ஷ்டம் வேண்டுமோ 
எல்லமிருப்பவனின் இயல் நோக்கு கூட 
இல்லாதவனுக்கு அதிர்ஷ்டமாக காண்கிறது 
பொதி சுமக்கும் கழுதைக்கு தெரியாது 
சில சமயம் பொதியில் 
உப்புக்கு பதில் பஞ்சும் இர்ருகுமென்று
கழுதைன் அதிர்ஷ்டத்துக்கு யார் காரணம் 
யாருக்கு என்ன கிடைக்குமென்பது 
அவன் போட்ட கணக்கு 
என்ன கிடைக்குமோ வேண்டாமென்றாலும் 
கிடைத்துத்தான் ஆகும் 
கிடைக்காது எனில் எத்தகை முயன்றும் கிடைக்காது 
கிடைதவனை சொல்லுவான் அதிர்ஷ்டகாரனென்று 
கிடைக்காதவன் அறிவானா
இந்த பாகுபாடு படைத்தவனால் வந்த வினை என்று
எனக்கும் குழப்பம்தான் 
சென்னை வெயில் தேவலையா சிங்கை வெயில் தேவலையா என்று 
அன்புடன்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 10

பூமித் தாயின் மடியில் தான் எத்தனைஎத்தனை 
செல்வங்கள் ....
ஒன்றில் ஒன்று எது சிறந்தது,
பிரித்துதான் பார்க்க முடியுமா?
தாயின் குழந்தைகள் பத்தானாலும் 
பத்தும் முதல் குழந்தைதான் தாய்க்கு 
இறைவனின் எண்ணற்ற குழந்தைகளில் 
மனிதராகிய நாமும் குழந்தைதான் 
குழந்தையின் சிரிப்பு இறைவனிடம் தேடல் 
குழந்தையின் கோபம் உரிமை 
இறைவனை அறிய அடையும் வழி 
குணமாகிய மனித மனம் 
அறியும் குணமோ தங்கத்தை வார்த்தது 
தங்கத்தின் தரமோ தணலில் 
தரத்தில் உயர உயர தங்கமோ தஹதஹகிறது 
குணத்தின் தரத்தை தங்கத்தில் காண 
மனதையும் இடலாம் புடத்தில் 
புடத்தில் போட்ட தங்கம் பொன் நகையகிறது
தங்கதச்சன் கைகளில் 
புடத்தில் போட்ட மனமும் ஆகலாம் பொன்னாக
தங்கதச்சனாம் இறைவனின் கைகளில் 
தாய் அறிவாள் தன் மகவின் 
கனவை, ஆசையை 
தானே வழியும் வகுப்பால் தானே அவ்வளவும் நிறைவேற 
தாய் அறியாத எல்லாமும் அறிந்த இறைத் தாயும் உண்டு,
எல்லாமும் ஆனா தாயே இறைவி யாய் ஆவதும் உண்டு 
யாதகிலும், காண்பது யாவும் நல்ல மனதின்   வாயிலே
வேண்டியதை பெறுவோம் இறைவன் வழியிலே 
வழியை தேடும்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 9

முயற்சி திருவினையாக்கும் ___வள்ளுவன் வாக்கு 
திரு_கடவுள்,வினை_வாங்கி வந்த வரம் ,ஆக்கும்_அடைவது,கிடைப்பது,
ஆக்குவதும்,அழிப்பதும் அவன் செயல் என்றாலும் 
வாங்கி வந்த வாழ்வு வரமா /சாபமா?
எவர் வாழ்விலும் ,தெளிந்து,தெளிந்து தேடினாலும் 
குழம்பி,குழம்பி மனம் அமிழ்ந்துதான் கிடக்கும் ஆழத்தில் ___
எது வாழ்வு,எது சரி, எது தவறு,என்று ,
மனம் தெளியாதா  தெளியாதா  என்று தேடும் போது
சிறிதளவாவது தெளியுமாயின்  அது,  
அள்ள,அள்ள வற்றாததும் ,எடுக்க, எடுக்க, குறையததும் 
சிற்றறிவுக்கு எட்டியதும் ஆவது __அன்பும் அறிவும் 
பொருளும் புகழும் காலத்திற்கேற்ப 
கொடுத்தும் எடுத்தும் குறைந்துவிடும் 
ஆன்மீகத்திலும் ஒரு பொழுது சலிப்பும் தோன்றலாம் 
(கடவுள் உள்ளனா என்று சில சமயம் தோன்றும் நாத்திக உணர்வில்)
ஊற்று தானைய் ஊறினாலும் சிறு முயற்சியின்றி 
வெளி வர இயலாது 
அஹ்தே அறிவும் அன்பும் 
அறிவுக்கு தெரியும் அன்புதான் அனைத்தும் என்று 
தெரிந்தும் ஏற்புடை நெஞ்சமின்றி 
அகந்தையும்,ஆணவமும் கண்ணை கட்டுகிறது. 
அகக்கண் அறிந்தும்,புறக்கண் திறக்க வேண்டாமோ 
கண் இல்லாமல் கால் போன பாதையில் போவது,
பாதி வழியிலேயே மீதியையும் கடக்க நினைப்பது போலதான் 
கண்ணை திறந்து நடந்து வாழ்வை வரமாக மாற்றும் முயற்சியில் 
சுபாரமேஷ்  

மனிதா யார் நீ - 8

ஆனந்த தண்டவமோ ஆழி ஊர்த்துவ தண்டவமோ
அடி முடி தேடி அலையவிட்ட ,

ஆடிய பாதத்தை தூக்கிய அம்பலவனனுக்கும் 
அரங்கனை போல் ஆசை வந்தது போலும்,_அடி அளக்க 
 தூக்கிய பாதம் விண்ணளக்க ,கண்ணசைவிலேயே 
சிறு கட்டேறும்புக்கும் படியளக்கிறான் 
ஆடியவன் ஆட்டியும் வைக்கிறான் அனைவரையும் பொம்மையை  போலே 
ஆடும் பொம்மைக்கு தெரியாது ஆடும் சூத்திரம் அவனிடதிலென்று 
ஆட்டமோ சுவாரசியம் பொம்மைக்கோ பெருமிதம் 
பாவம், தன் கயிற்றின் நுனி தன்னிடம் இல்லை என்று 
அந்த பொம்மலாட்ட பொம்மைக்கு தெரியாது     
அடி எடுத்து வைக்கும் குழந்தைக்கு 
அடுத்த அடி ஓட்டம்தான் 
ஐந்தில் ஆரம்பித்தது ஆயுள் வரை
ஓட்டம் ஓட்டம் தான் 
ஓடும் ஓட்டம் எதற்காகவோ, எதையோ தேடித் தேடி
நாடிய பொருள்மேல் நாட்டம் கொண்டும் 
தேடிய பொருள்மேல் மென்மேலும் தேடல் கொண்டும் 
கடைசிவரை நிற்காத ஓட்டம் 
ஒரு முறை தேடல் விடையில் சுவை காண 
விடமுடியாது வாழ்க்கை முழுதும் தேடல் ஓட்டம்தான் (சிறந்த உதாணரமாக இந்த கவிதை தேடலையும் சொல்லலாம் )
கரை சேர கடவுளை பற்ற ,ஆன்மீக தேடலும் ஓட்டம் போல் தோன்றுகிறது
ஓடி ஓடி களைத்தாலும் ,தேடுவது என்னவென்றே தெரியாமல் தேடுவதும் 
கிடைப்பதும் என்னவென்று தெரியாமல் இருப்பதும் 
சுகம்தான்,இன்பம்தான் 
உலகமே மாயை என்னும் உலகில் மாயையை தேடுவது வியப்புதான்  
ஆனால் நீர்க்குமிழிபோல் மாறி மாறி  கிடைக்கும் சுகமும் துக்கமும் 
வாழ்வின் சுவாரஸ்யமான பக்கங்கள்தான்  
அன்புடன் 
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 7

கடவுள் கருணை, பணம் பதவி,நம்பிக்கை,நாணயம்,
நேர்மை,நியாயம் ,வெற்றி,தோல்வி, ஆசை,பாசம்
கடவுள்,ஆன்மிகம் __என எல்லாம் வாழ்வின் ஆதாரத்தை தேடும் அளவுகோல் 
வாழ்வு___ யாரறிவர் வாழ்வென்பதை 
வழி வகுத்த பாதையை பற்றி நாம் செல்கின்றோம் 
ஆதாரம் ஒன்றை ஒன்று பற்றி நிற்பது.
பற்று__ஆசையும் ஆகும், ஆதாரமும் ஆகும்.
ஆசை, பற்றியது எதுவோ   பற்றிக்கொள்ள தூண்டுகிறது 
ஆதாரம் ___பற்றிய ஆசையின் வழி தொற்றிக்கொண்டு செல்ல நினைப்பது 
செல்லும் இடமும், செல்லும் தூரமும் நாம் அறியோம்
அறிந்து கொள்ளும் முயற்சி கடவுளின் மேல் பற்று,
கடவுள் அறியுமோ எல்லோரும் பற்றுவது தாம் என்று,
அறியாமையில் இதுவும் அழகன்றோ?
பற்றுவது யாதென்று யாமும் அறியோம், 
பற்றியது யாரென்று அவனும் அறிவானோ?
யாதகிலும் நம்பிக்கையை பற்றுவோம் திறக்கும் கதவுகள் 
திறக்கட்டும் ,பேரானந்தம் பிறக்கட்டும் 
எதிர் நோக்குவோம்    ஒளி மயமான எதிர்காலத்தை ,
அன்புடன் சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 6

மனிதனை தேடுவதா?ரொம்பவும் கடினமான காரியம்,
ஏழு வரங்கள் அல்ல ஈரேழு வருடங்களனாலும்விடை காண முடியாத வினா 
மனித உருவகம்தான் 
மனம் காட்டும் பளிங்கு மனதை காட்டினால்,
அழகு முகம் தெரியாது,அடிக்கடி தெரிவது மிருக விகாரம்தான்..,
சிறு திருத்தம்
மனம் அழகாயிருந்தால் எல்லாம் அழகாய் தெரியும்
அங்கு மனிதனும் அழகாய் தெரிவான் 
இல்லாவிடில்,அழகான மனிதனும் அகோரமாய்,மிருகமாய் தோன்றுவான்
வினாவுக்கு விடை இல்லாமல் இது என்ன விளக்கம் என்று தோன்றுகிறதா 
மனிதனை தேடுவது கடினம் ஆனால்மனிதனாக முயற்சிப்பது எளிதல்லவா?
மனிதனை அடையாளம் காட்ட ஆன்மீகத்தையும்  ஒரு கருவியாக அல்லது காரணமாக கொள்ளலாம்
ஆன்மீக தேடலுக்கு அனைத்து இன்பங்களும் தேவை என்று கூட தோன்றுகிறது
சிறு மலரையும் சிறு வண்டையும் காற்றையும் மழையையும் 
கடலையும் வானையும்காதலையும் கடவுளையும்
சிறு குழந்தையின் சிரிப்பையும்,நரை கிழவன் நடுக்கத்தையும்
ரசிக்க எல்லா இதயதுக்குளும் சிறு துளி ரசனையாவது இர்ருக்க கூடும்
அந்த சிறு துளியில் தான் தெரிகின்றானோ மனிதன்....
இல்லையென்றால் எல்லா கடவுளும் அவதாரமாக வந்து மனிதபிறவி எடுத்தது எதற்கோ?
இன்பங்களையும்,துன்பங்களையும் ரசிக்கதானோ
மனிதனாக பிறக்கவும் மாதவமும் செய்திடல்  வேண்டும் தான்  ,   
மனிதனுக்குள்ளேயே மனிதனை தேடினால் கிடைப்பானோ என்னவோ 
தேடிபார்போமா ????

மனிதா யார் நீ - 5

எங்கு நோக்கினும் பரிதவிப்புகள் எங்கும் துயரம்
எந்த பக்கம் பார்த்தாலும் 
ஆழ்ந்த துக்கமும்,அளவில்லாத துயரமும்
மாமனின் மடலிலும்,சிறிய தந்தைன் சிற்றோலைலும்
கண்டேன் வேதனைன் ஓலத்தை,
உலகமே ஆர்பரிக்கும் ஆதங்கத்தில் 
என் சொந்த சோகமும் வெளிப்பட்டு விடுமோ என்ற ஐயம்
ஐயம் எதனால்
மனிதனா மகானா என்ற தொடங்கிய நிலைக்கே செல்வோம் 
தனி மனித துயரம் ,தன் மனைக்கும்,தன் மனிதருக்கும்
பிந்தையது __உலகினுடியாது, 
இன்னும் முந்தைய நிலைக்கு செல்வோம் 
கை கால்களை உதைத்து அடம் பிடிக்கும் குழந்தைன் நிலையில் மனிதன்........
எத்தனை மகான்கள் பிறவிப் பயனையும், பிறவிகடனையும்
தெள்ளதெளிவாக அறுதியிட்டு காண்பித்தாலும் 
ஒரு ராமனும்,ஒரு கிருஷ்ணனும்,ஒரு ராமகிரிஷ்ணனும்
ஒரு ரமணரும் ஒரு சாயிய்  மகானும்
பிறவி பெருங்கடலில் உரைத்து உணர்தியது
பிரிவும் பெருந்துயரும் சரஈரதிர்கேயன்றி 
ஆன்மாவுக்கல்ல ,,,
அவர்தம் அடைந்த சரிரதுன்பம் அனைத்து உயிர்களும் (மகானையும் விட்டு வைபதில்லை இந்த சரிர துன்பம்) 
உணரவேண்டிய பிறவி பெருவினை,
மனித குழந்தைக்கு புரிகிறது தெரிகிறது,
என்ன பயன் __
அடம் பிடிக்கும் குழந்தை அடம் பிடிகிறது  (அடம்_ எல்லாம் தெரிந்துகொண்டே கிடைக்காது என்றாலும் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற நிலை) 

நான், எனது,என்னுடையது என்று ___
ஆன்மாவையும் தனுடியாதக்கி, 
ஆன்மாவோ ____விட்டு பறக்றது வந்த வேலை முடிந்ததென்று,,,,
என்றும் அன்புடன்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 4

............எல்லாம் அவன் தான்,எல்லாம் அவன் செயல்தான் 
அதனால்தானோ
மனிதரில் தெய்வம்சத்தை பார்க்கும்போது,
ஆஹா என்னவொரு தெய்வபிறவிஎன்றும்,
தெய்வத்தின் வடிவாக மனிதனை பார்க்கும்போது
மனுஷே தெய்வரூபனே என்றும்-மலைதுபோகிறோம்
வசதியாய் கடவுளும் விளையாடுகிறான் 
மனிதனில் மகனாகவும் மிருகமாகவும் ,
ஒரு நிமிடம் கலங்கி பார்க்கும்போது
கடவுளே இர்ருகிரான  என்று அச்சமும், மயக்கமும் தோன்றுகிறது,........
சில பல சுனாமிகளையும்,சிலபல போர்களையும்(தமிழிழ)
இன்னும் அறுதியிட்டு கூறமுடியாத பல சில நிகழ்வுகளும் 
கண்ண்களில் தோன்றித் தோன்றி மறைய  
 உண்மையாகவே எங்கு சென்று தேடுவது 
வாழ்வின் அர்த்தத்தை என்று குழம்புகிறது மனது 
உமது விடை பார்த்து மனம் தெளிய 
காத்திருக்கும்
சுபாரமேஷ்