Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 9

முயற்சி திருவினையாக்கும் ___வள்ளுவன் வாக்கு 
திரு_கடவுள்,வினை_வாங்கி வந்த வரம் ,ஆக்கும்_அடைவது,கிடைப்பது,
ஆக்குவதும்,அழிப்பதும் அவன் செயல் என்றாலும் 
வாங்கி வந்த வாழ்வு வரமா /சாபமா?
எவர் வாழ்விலும் ,தெளிந்து,தெளிந்து தேடினாலும் 
குழம்பி,குழம்பி மனம் அமிழ்ந்துதான் கிடக்கும் ஆழத்தில் ___
எது வாழ்வு,எது சரி, எது தவறு,என்று ,
மனம் தெளியாதா  தெளியாதா  என்று தேடும் போது
சிறிதளவாவது தெளியுமாயின்  அது,  
அள்ள,அள்ள வற்றாததும் ,எடுக்க, எடுக்க, குறையததும் 
சிற்றறிவுக்கு எட்டியதும் ஆவது __அன்பும் அறிவும் 
பொருளும் புகழும் காலத்திற்கேற்ப 
கொடுத்தும் எடுத்தும் குறைந்துவிடும் 
ஆன்மீகத்திலும் ஒரு பொழுது சலிப்பும் தோன்றலாம் 
(கடவுள் உள்ளனா என்று சில சமயம் தோன்றும் நாத்திக உணர்வில்)
ஊற்று தானைய் ஊறினாலும் சிறு முயற்சியின்றி 
வெளி வர இயலாது 
அஹ்தே அறிவும் அன்பும் 
அறிவுக்கு தெரியும் அன்புதான் அனைத்தும் என்று 
தெரிந்தும் ஏற்புடை நெஞ்சமின்றி 
அகந்தையும்,ஆணவமும் கண்ணை கட்டுகிறது. 
அகக்கண் அறிந்தும்,புறக்கண் திறக்க வேண்டாமோ 
கண் இல்லாமல் கால் போன பாதையில் போவது,
பாதி வழியிலேயே மீதியையும் கடக்க நினைப்பது போலதான் 
கண்ணை திறந்து நடந்து வாழ்வை வரமாக மாற்றும் முயற்சியில் 
சுபாரமேஷ்  

No comments:

Post a Comment