Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 11

ஆனந்தமாய் ஒருவன் அமர்ந்து இருந்தான் ஆற அமர,
அருகில் சென்று அறிந்தால் ,சுகமாய் அடிகிறது காற்று,
என் அதிர்ஷ்டம் என்றான் 
என்னஇது காற்றடிக்க கூட அதிர்ஷ்டம் வேண்டுமோ 
எல்லமிருப்பவனின் இயல் நோக்கு கூட 
இல்லாதவனுக்கு அதிர்ஷ்டமாக காண்கிறது 
பொதி சுமக்கும் கழுதைக்கு தெரியாது 
சில சமயம் பொதியில் 
உப்புக்கு பதில் பஞ்சும் இர்ருகுமென்று
கழுதைன் அதிர்ஷ்டத்துக்கு யார் காரணம் 
யாருக்கு என்ன கிடைக்குமென்பது 
அவன் போட்ட கணக்கு 
என்ன கிடைக்குமோ வேண்டாமென்றாலும் 
கிடைத்துத்தான் ஆகும் 
கிடைக்காது எனில் எத்தகை முயன்றும் கிடைக்காது 
கிடைதவனை சொல்லுவான் அதிர்ஷ்டகாரனென்று 
கிடைக்காதவன் அறிவானா
இந்த பாகுபாடு படைத்தவனால் வந்த வினை என்று
எனக்கும் குழப்பம்தான் 
சென்னை வெயில் தேவலையா சிங்கை வெயில் தேவலையா என்று 
அன்புடன்
சுபாரமேஷ் 

No comments:

Post a Comment