Friday 2 September 2011

manidhabimaanam

வாழும் வாழ்கையே ஒரு விளையாட்டுதான் 
மிகவும் சுவாரஸ்யம் கண்ணாமூச்சிதான்
நீ எந்த பக்கம் நான் எந்த பக்கம்
தெரிந்தும் தெரியாதது போல் 
தெரிந்தே ஆடுவது அதைவிட சுவாரஸ்யம்தான் 
நினைத்ததும் கிடைப்பது மகிழ்வு என்றால் 
தொலைந்ததும் கிடைத்தால் பெருமகிழ்வுதான் 
எத்தனைமுறை வேண்டுமானாலும் 
தொலைக்கவும் தோன்றுகிறதோ 
தொலைத்த மகிழ்ச்சியை மீண்டும் பெற 
என் செய்ய , எல்லாம் புரிந்தும் 
ஒரு முறை தொலைத்தது ,
தானறியாமல் தொலைந்தது ,அறிந்தே தொலைக்கப்பட்டது
எது என்றே அறியாமல் தொலைந்தது
எதாகிலும் கிடைத்தால் ஆனந்தம்தான்
கிடைக்குமா என்பதுதான் சந்தேகம் 

1 comment:

  1. ஒரு முறை தொலைத்தது ,
    தானறியாமல் தொலைந்தது ,அறிந்தே தொலைக்கப்பட்டது
    எது என்றே அறியாமல் தொலைந்தது
    எதாகிலும் கிடைத்தால் ஆனந்தம்தான்
    கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்

    அருமையான வரிகளில் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete