Saturday 19 November 2011

pennaga thondruvadhu....

கல கல வென சிரிக்கும் குரல்
என்னஇது நான் இங்கிருக்க என் போல் சிரிக்கும் யாரோ?
யாரென்று யாரென்று காண்கிறேன்
காணக்கிடைக்கவில்லை,
காணும் யாவும் கற்பனையின்றி கனவுதானோ?
உற்றுபார்க்கும் போது
என்றோ நான் சிரித்த சிரிப்பினோளிகல்தான்,
சிரித்து சிரித்து கண்ணோரம் துளிர்க்கும்
சிறு துளி கண்ணீரும் தெரிகிறதே ,
கனவுக்கண்ணிரில் நினைவுக்கண்ணிரும் தெரிய,
நினைத்தும்தான் பார்கிறேன்
ஆம் ,கண்ணிர் வர கடைசியாய் சிரிததேபொழுது
சிரிப்பு மட்டும் தானா
வெடித்து அழும் அழுகையில் வரும் நிம்மதிஎங்கே?
இதழ் கடையோரம் நின்றுவிட்ட புன்னகை இன்
அருகில் இதழ் மடிந்து காண்பதென்ன?
உளிழுக்கபட்டஅழுகை இன் ஆரம்பமா முடிவா,
கொப்பளிக்கும் கோபம் போனதெங்கே?
ஆங்காங்கே ஒரு குரல் தோன்றும் போது
கோபமும் வருமோ என்ற குற்றத்தில்
கோபமும் குற்றமானதின்  மாயமென்ன?
ஊண் உடல் வருந்தி
வருத்தத்தையும் வருந்தி போகச் செய்யும்
வாழ்வு கண்ண்டது எது?
கண்ண்டெடுத்தவாழ்வில்
மோகனமும்,ஸ்ரிங்காரமும் மூடி வைத்த
அறைக்குள்ளே முடிந்தும் விடுமா?
தோன்றும் உணர்வின் தோன்றலும் முடிவும்
தோன்றா செய்வது எத?
நினைபதையும் நெஞ்சுக் குழியிலேயே
நிறுத்தி விடுவதன் பெயர்தான் என்ன?
எதனை முறை கேட்டாலும்
நெஞ்சிலே நிற்பதுவும்தான்  என்ன?

1 comment:

  1. இவ்வளவு சிறப்பாக கவிதை எழுதும் திறமையை வச்சுண்டு எப்படி சும்ம இருக்க முடியுது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் உள்ளதை கவிதையில் சொல்லு. படிச்சு ரசிக்க நாங்க நிறையா பேரு காத்திருக்கோம்

    ReplyDelete