Tuesday 26 July 2011

manidhanai thedum muyarchiyil

மனிதனை தேடும் முயற்சியின் 
கவிதைபட்டரையில் சிறு மராமத்து,
கலம் பிடித்த கை யின் நமநமப்பு,
மனிதனை தேடித்தேடி தொலையும் பொது 
தோன்றிய ஒலி, ஒளிகள் 
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு தனக்கான பொழுதில்
உண்மை மனிதனாகவே இருக்கிறான் 
எங்கெங்கும் தேடாமல் 
ஆழ் மனக் கூற்றுக்குள் மனக் கண்களில் விளங்கும் .
முரட்டு மூங்கிலின் துளை இன் நாதம் போலும் 
கடல் கொண்ட சீற்றத்தின் அடி கொண்ட
ஆழ் கடலின் அமைதி நீரோட்டம் போலும்
அடிகரும்பின் வேர்களின் இடையில் 
இனிப்பின் சுவை போலும்
பெருமரத்தின் பிளந்த பட்டைகளின் 
மெல்லிய சந்தன வசம் போலும்
ஊது பத்திஇன் சுழலும் சிறு புகை போலும் 
தூய்மையான மனமும், மனித நேயமும்
அடி மன ஆழத்தில் சுழன்றுகொன்டுதான் இருக்கிறது.
கடும் பாறையின் கருங்கற்கள் போல கடினப்பட்டு ,
சில அடி தூரத்திலும் கண்ணுக்கு புலப்படாத 
பனி போர்த்திய பாதை போல 
மனதை மறைக்கிறது அதன் பொய்யான சுவர்கள் 

No comments:

Post a Comment